பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1978Shares
1978Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் காதலிக்காக பெற்றோரை கொல்ல இணையத்தில் வெடிகுண்டு ஆர்டர் செய்து வரவழைத்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது காதலியை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்ததும் 19 வயதேயான Gurtej Randhawa என்ற இளைஞர் இணையம் வாயிலாக வெடிகுண்டு ஆர்டர் செய்துள்ளார்.

குறித்த இணையப் பக்கத்தை கண்காணித்து வந்த குற்றவியல் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவர, துரிதமாக செயல்பட்ட அவர்கள், குறித்த இளைஞருக்கு அனுப்பிய வெடிப்பொருட்கள் பெட்டியில் போலியான வெடிகுண்டை இணைத்துள்ளனர்.

மட்டுமின்றி பொலிசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்த குறித்த இளைஞன், பார்சலை வாங்கிய சில நிமிடங்களிலேயே பொலிசாரால கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து Gurtej Randhawa விசாரணையை எதிர்கொண்டு வந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட Randhawa-கு நேற்றைய தினம்பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புவழங்கியுள்ளது.

இளைஞர் Randhawa இணையத்தில் ஆர்டர் செய்த வெடிகுண்டானது மிகவும் ஸ்ரீ சக்தி வாய்ந்தது எனவும், அவர் அதை வெடிக்கச் செய்திருந்தால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞருக்கு பயங்கரவாத குழுக்களுடனோ, பயங்கரவாதிகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் அவரது நடவடிக்கைகள் சமூகத்தில் அச்சுறுத்தலைஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்