பிரித்தானியாவில் சிறிய அளவில் நிலநடுக்கம்: வீடுகள் அதிர்ந்தன

Report Print Balamanuvelan in பிரித்தானியா
572Shares
572Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

3.2 ரிக்டர் அளவில் இங்கிலாந்தின் Workington மற்றும் Whitehaven நகரங்களுக்கு இடையே மையம் கொண்டு உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cumbria-வில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அச்சத்திற்குள்ளாக்கிய நிலையில், மக்கள் ட்விட்டரில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“Cumbria-வில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும், எனது வீடு முழுவதும் அதிர்ந்தது” என்று ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இன்னொருவர் “Cumbriaவில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நில நடுக்கம் 20 விநாடிகள் நீடித்தது.

இது கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவு கொண்ட அந்த நில நடுக்கம் Walesஇன் சில பகுதிகளையும் பிரித்தானியாவையும் குலுங்கச் செய்தது.

பிரித்தானியாவில் ஒவ்வொரு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலநடுக்கம் ஏற்படுவதாக The British Geological Survey தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்