ரஷ்ய உளவாளி மகளுடன் இருக்கும் புகைப்படங்கள்: புகைப்படங்களை எடுத்தது யார்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நச்சுத் தாக்குதலுக்குள்ளான ரஷ்ய உளவாளியான Sergei மற்றும் அவரது மகள் Yulia Skripal ஆகியோரின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

அந்தப் புகைப்படங்களை எடுத்தது யார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது, தற்போது அவர்கள் தாக்குதலுக்குள்ளாவதற்குமுன் சென்ற அதே மது பான விடுதியில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இன்னொரு புகைப்படம் அவர்களது வீட்டிற்குமுன் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது Sergei, Yulia Skripal மற்றும் அவர்களை முதலில் அணுகிய பொலிசார் மூவரும் கோமா நிலையிலேயே இருந்தாலும், Sergeiயைக் காப்பாற்றுவது கடினம் என்றும் மற்ற இருவரின் நிலைமையிலும் சற்று முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்களை பாதித்த அந்த நச்சுப்பொருள், ரஷ்யாவிலிருந்து Sergeiக்கான ஒரு பரிசுப்பொருள் என்ற பெயரில் Yuliaவிடமே கொடுத்து அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் அந்த நச்சுப்பொருள் ஸ்பிரே செய்யப்பட்டது என்பதைவிட அவர்கள் அருந்திய பனத்தில் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு பதட்டமான சூழல் பிரித்தானியாவில் நிலவும் நேரத்தில் ரஷ்ய அதிபர் புடினோ எதுவுமே தெரியாததுபோல் ஒரு சாக்லேட் மற்றும் கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் டூர் அடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...