பிரித்தானியாவில் மர்ம கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையான 1000 சிறுமிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
533Shares
533Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் நீண்ட பல ஆண்டுகளாக மர்ம கும்பலொன்று சிறுமிகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் டெல்ஃபோர்ட் பகுதியிலேயே கடந்த 40 ஆண்டுகளாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வந்துள்ளது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் இரக்கமின்றி காமுகர்களின் கொடூர தாக்குதல்களுக்கு இரையாகியுள்ளனர்.

இந்த மர்ம கும்பலிடம் சிக்கியுள்ள சிறுமிகளை போதை மருந்து செலுத்தியும், பாலியல் சித்ரவதைக்கும் உட்படுத்தியும், பலாத்காரத்திற்கு இரையாக்கியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த கொடூர சித்ரவதைகளில் சிக்கி 2 சிறுமிகள் இறந்ததாகவும், 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் 1980களில் இருந்தே நடைபெற்றுவரும் இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் பகிரப்பட்டும், குறித்த கும்பலை சிக்க வைப்பதில் பொலிசார் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதாரங்களை திரட்டி பொலிசாரிடம் அளித்திருந்தும், விசாரணையை முன்னெடுக்க பொலிசார் நீண்ட 10 ஆண்டுகள் எடுத்துள்ளனர்.

மட்டுமின்றி ஆசிய சமூகத்தை சார்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரம் சிக்கியபோது இனவாதம் தொடர்பில் பிரச்னை எழும் என பொலிசார் அஞ்சியதாக கூறப்படுகிறது.

குறித்த மர்ம கும்பலில் சுமார் 200 பேர் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் இதுவரை 9 நபர்களை மட்டுமே கைது செய்துள்ள பொலிசார், பின்னர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தும் இந்த கும்பலில் சிலர், பல ஆயிரங்களை ஒவ்வொரு இரவும் சம்பாதித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த கும்பலில் உள்ள 18 வயதேயான ஆசிய இளைஞன் ஒருவன் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலிக்கு ஈடுபடுத்தி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதலில் நட்பாக பழகிய இருவரும், சிறுமி முதன் முறையாக கர்ப்பமான பின்னர், அந்த இளைஞன் தமது நண்பர்களுக்கு குறித்த சிறுமியை விருந்தாக்கியதும் தற்போது தெரியவந்துள்ளது.

1985 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலை மற்றும் நிர்வாகிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்