மேலும் ஒரு ரஷ்ய உளவாளி பிரித்தானியாவில் மரணம்: பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
360Shares
360Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் முன்னாள் ரஷ்ய உளவாளி கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்தவர் Nikolai Glushkov. இவர் லண்டனில் உள்ள தமது குடியிருப்பில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

68 வயதான Nikolai Glushkov ரஷ்ய அரசு மீதான கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி பிரித்தானிய ஆதரவுடன் லண்டனில் குடியிருந்து வந்துள்ளார்.

Nikolai Glushkov கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியாது எனவும், போதிய ஆதாரங்களை திரட்டிய பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்