பிரித்தானியா விமானநிலையத்தில் பீதியை கிளப்பிய மர்ம பொருள்: என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா விமானநிலையத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வயர்களுடன் மர்ம பை ஒன்று இருந்ததால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமானநிலையத்தில் உள்ள Terminal 2-வில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்ததால் உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணியளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக Terminal 2-வில் இருக்கும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின் அங்கு கிடந்த பையில் வயர்கள் போன்றவைகள் இருந்ததால், வெடி குண்டா இருக்கலாம் என்று உடனடியாக வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அதை முழுமையாக சோதனை செய்த போது, உள்ளே லேப்டாப் ஒன்று இருந்துள்ளது. அதை கைப்பற்றிய அதிகாரிகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் வெடிகுண்டு என்ற தகவல் பரவியதால், அங்கிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் இருந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் அதை கைப்பற்றிய பின்னரே நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இந்த சோதனைகளுக்கு பின் Terminal 2 இரவு 10.45 மணிக்கு திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers