19 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை: மகள் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா
767Shares
767Shares
lankasrimarket.com

ஸ்காட்லாந்தில் மகளை தந்தை துஷ்பிரயோகம் செய்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவை சேர்ந்தவர் ஜேம்ஸ் எல்டர் (43) இவர் மனைவி லிஸ் கிரைக், இவர்களின் மகள் ஜேமி லீ (19).

மகள் என்ற முறையை மறந்து ஜேமியிடம் ஜேம்ஸ் தொடர்ந்து அத்துமீறியுள்ளார்.

ஜேமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய ஜேம்ஸ் கடந்த 2016-ல் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் தனது நண்பர்கள் மூவரை வீட்டுக்கு அழைத்து வந்து மகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வைத்துள்ளார்.

இந்த விடயத்தை தனது தாயிடம் வெகுநாட்களாக சொல்லாமல் இருந்த ஜேமி பின்னர் கதறி அழுது கொண்டே அனைத்து விடயங்களையும் கூறியுள்ளார்.

மகளை கிரைக் தேற்றிய நிலையில் தந்தை செயலால் மன அழுத்தத்தில் இருந்த ஜேமி டிசம்பர் 2016-ல் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் ஜேம்ஸை கைது செய்தார்கள்.

ஜேம்ஸுக்கு எதிராக அவர் மனைவி கிரைக் நீதிமன்றத்தில் சாட்சி கூறியதோடு தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

ஜேம்ஸ் மீதான நீதிமன்ற விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

இதையடுத்து ஜேம்ஸுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மேத்யூஸ் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் ஜேம்ஸ் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்