குட்டி இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்: கைது செய்யப்பட்ட இணையதள தீவிரவாதி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பள்ளியில் வைத்தே பிரித்தானிய இளவரசரான வில்லியம் - கேட் தம்பதியினரின் மகன் குட்டி இளவரசர் ஜார்ஜை கொல்லுமாறு தனது ஆதரவாளர்களுக்கு செய்திகள் அனுப்பியதாக கைது செய்யப்பட்ட இணையதள தீவிரவாதி இன்று நீதிமன்றத்தின்முன் ஆஜர் செய்யப்பட்டான்.

இளவரசரைக் கொல்ல வேண்டும் என்றும் சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் ஐஸ் கிரீம்களில் விஷத்தை ஊசி மூலம் செலுத்த வேண்டும் என்றும் அவன் தனது ஆதரவாளர்களுக்கு செய்திகளை அனுப்பியுள்ளான்.

Husnain Rashid (31) என்னும் அந்த தீவிரவாதி, தனி மனிதனாக விஷம், ரசாயனங்கள், வெடிகுண்டுகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி எப்படி தாக்குவது என்பது குறித்து அவன் ஆலோசனைகளை வழங்கியுள்ளான்.

சிரியாவிலுள்ள ஒரு ஐ.எஸ் தீவிரவாதியுடன் தொடர்பிலிருந்த அவன் தனது தனி இணையதள சேனலை இயக்கி வந்துள்ளான்.

மத்திய கிழக்கு நாடுகளில் போரிடுவதற்கு ஒரே மாற்று மேற்கத்திய நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்துவதுதான் என்று அவன் நம்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவனைப் பொருத்தவரையில், தாக்கப்படுபவர்கள் பெரியவர்களா, குழந்தைகளா, அல்லது ராணுவ வீரர்களா பொதுமக்களா என்பதைக் குறித்தெல்லாம் அவனுக்கு கவலையில்லை.

அவனது ஆலோசனைகளில் சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் ஐஸ் கிரீம்களில் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவது குட்டி இளவரசர் ஜார்ஜை பள்ளியிலேயே கொல்லுவது ஆகிய விடயங்களும் அடக்கம்.

இத்தகைய தீவிரவாத ஆலோசனைகள் அடங்கிய 290,000 செய்திகளை அவன் encrypted முறையில் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

Lancashireஇலுள்ள Nelson என்னும் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் Husnain Rashid என்னும் அந்த தீவிரவாதி தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...