சிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்: வீடியோ எடுத்து வசமாக பிடித்த தம்பதி

Report Print Santhan in பிரித்தானியா
347Shares
347Shares
ibctamil.com

பொது நூலகத்தில் சிறுமிகள் இருக்கும் நிலையில், அங்கிருக்கும் கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்தம் சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார்.

அப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு உள்ளே இருக்கும் புத்தகங்களை பார்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது சிறுவன் ஏதோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்துள்ளான். இதைக் அண்ட நகினா ஏன் சிரிக்கிறான் என்று பார்த்த போது, அருகிலிருந்த கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளார்.

நூலகம் என்றும் பார்க்காமலும், சிறுவர், சிறுமியர் என பலர் வந்து செல்லும் இடம் என்று கூட இல்லாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நகினா அந்த நபரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார்.

அப்போது அவர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததை, நகினாவின் கணவர் வீடியோவாக எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் பேசிய போது, ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து வீடியோ எடுக்க அவர் உடனடியாக கம்யூட்டரை அணைத்து விட்டு, எதுவும் பேசாமல் வேறொரு இடத்திற்கு சென்று அங்கிருக்கும் செய்திதாளை படிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து அந்த தம்பதி, நூலகத்தின் பெண் மேலாளரிடம் கூறியுள்ளனர். அவரோ அந்த இளைஞனுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளேன், இதை இப்படியே விட்டுவிடுங்கள் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அந்த தம்பதிக்கு ஆத்திரம் தீராததால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன் பின் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் குறித்த நபர் நூலகத்தில் நுழைவதற்கு பயன்படுத்தப்படும் ஐடி கார்டை தடை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி Slough பகுதியில் இருக்கும் அனைத்து நூலகத்திலும் இந்த நபர் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலகம் சார்பில் கூறுகையில், நூலகத்தில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இது போன்ற இணையதளங்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தான் வசதி செய்து வைத்திருந்தோம்.

ஆனால் அந்த நபர் ஏதோ பயன்படுத்தி இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நபர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரிலிருந்து சில அடி தூரம் தான் சிறுமிகள் உட்கார்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்