பிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தமது நண்பரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ள வழக்கில் லிவர்பூல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் மது வாங்கித்தருவதாக அழைத்து சென்ற நண்பனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்து Ian Robertson என்பவர் படுகொலை செய்துள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இச்சம்பவத்தை ராபர்ட்சன் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி உனது பிள்ளைகளிடம் ஏதாவது இறுதியாக சொல்ல விரும்புகிறாயா எனக் கேட்டு சித்திரவதை செய்துள்ளார் ராபர்ட்சன்.

இந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் பணிக்கு செல்லாததால் அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து விசாரித்துள்ளனர்.

அதற்கு, தாம் ஒரு கொலை செய்துள்ளதாகவும், அதனை மறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து தமது மனைவியுடன் இணைந்து கொல்லப்பட்ட Robert Sempey-ன் உடலை அவர்களது குடியிருப்பின் அருகாமையிலே மறைவு செய்துள்ளனர்.

மட்டுமின்றி Sempey-ன் ரத்தம் தோய்ந்த உடலை புகைப்படமாக எடுத்து தாம் பணிபுரியும் நிறுவன மேலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் ராபர்ட்சனை கைது செய்துள்ளனர்.

Sempey-ன் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் மட்டும் 12 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முவடைந்த நிலையில் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மட்டுமின்றி 21 ஆண்டுகளுக்கு பின்னரே பிணையில் வெளிவிட வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்