அன்று பிரித்தானியாவில் கோடிகளை லாட்டரியில் வென்ற நபர்கள்! இன்று எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

அதிர்ஷ்டம் ஒரு முறை தான் வீட்டின் கதவை தட்டும், அந்த வகையில் பிரித்தானியாவில் தங்களுக்கு லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான ரூபாய்களை அவர்கள் போதை மருந்து, ஆடம்பரமான கார்கள் மற்றும் விபச்சாரம் போன்றவற்றிற்கு செலவு செய்து கோடிஸ்வரர் இருந்த நபர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

இவர்கள் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

John McGuinness

ஸ்காட்டிஸ் மருத்துவமனையின் காவலாளியான இவருக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு National லாட்டரியில் £10 மில்லியன் (இலங்கை மதிப்பில் தற்போது 2,19,94,03,202 கோடி ரூபாய்) ஆகும்.

தற்போது இவர் வாரத்திற்கு £150 மட்டுமே சம்பாதிப்பதாகவும், தந்தையின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லாட்டரியில் விழுந்த பரிசை இவர் 3 மில்லியன் பவுண்டை தன்னுடைய குடும்பத்திற்கு செலவு செய்துள்ள இவர், £750,000-ஐ தன்னுடைய முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். அதன் பின் ஆடம்பர கார்கள், வெளியில் செல்வது, இரண்டாவது திருமணத்திற்கு £200,000 என செலவு செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக £4 மில்லியனை ஒரு தனியார் Football Club-ல் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் அந்தளவிற்கு வருமானம் இல்லாமல், நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

John Roberts

கடந்த 1998-ஆம் ஆண்டு இவருக்கு £3.1 மில்லியன்(இலங்கை மதிப்பில் தற்போது 52,15,44,000 கோடி ரூபாய் ) லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

அதை இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்வது மற்றும் பலவற்றில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார். இவர் ஒரு பப் ஒன்று வாங்கியுள்ளார், ஆனால் அதிலும் போதுமான வருமானம் இல்லாமல் இருந்துள்ளது.

தற்போது இவர் caravan-ல் வெறும் £20,000 வருமானத்துடன் வசித்து வருகிறார்.

Callie Rogers

பிரித்தானியாவின் இளம் வயது லாட்டரி வெற்றியாளரன இவருக்கு கடந்த 2003-ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 16 வயதில் £1.8 மில்லியன்( இலங்கை மதிப்பில் தற்போது 39,58,92,576 கோடி ரூபாய்) விழுந்துள்ளது.

தற்போது 31 வயதாகும் இவர் இவர் எதிர்காலத்தைப் பற்றி உணராமல் கண்ட படி செலவு செய்துள்ளார்.

அதாவது 180,000-பவுண்டுக்கு வீடு, மூன்று முறை மார்பக அறுவை சிகிச்சைக்காக 18,000 பவுண்ட், பரிசு பொருட்கள் மற்றும் நண்பர்களுக்கு 500,000 பவுண்ட், Cocaine-க்கு 250,000 பவுண்ட் என மொத்தம் 1,248,000 பவுண்ட்டை இப்படியே காலி செய்துள்ளார்.

மீதித் தொகைகள் உடை வாங்குவது போன்ற ஆடம்பரங்களுக்கு செலவு செய்துள்ளார். இளம் வயதில் மில்லியனரான இவர் தற்போது தன்னுடைய 6 வயது மகனின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நான் எப்போதும் பணத்தை பெரிதாக் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தற்போது மகனின் சிகிச்சைக்காக அந்த பணம் தேவைப்படுகிறது என்ற போது, கவலையாக இருக்கிறது.

நான் கிடைத்த பணங்களை இழந்துவிட்டேன் தான், ஆனால் தோல்வியடையவில்லை, என் குழந்தைகளுக்காக நான் கடினமாக உழைக்கிறேன், என்னால் முடியும்.

என்னிடம் பணம் இல்லை என்றாலும், தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகனின் சிகிச்சைக்காகவே அந்த பணம் தேவைப்படுவதால், மற்ற படி அந்த பணத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Roger Griffiths

முன்னாள் ஐடி மேலாளரான இவருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு £1.8 மில்லியன் (இலங்கை மதிப்பில் தற்போது 39,58,92,576 கோடி ரூபாய்) விழுந்துள்ளது.

லாட்டரியில் விழுந்த பரிசால் இவர் மற்றும் மனைவி இருவரும் தங்களுடைய வேலையை விட்டு நின்றுள்ளனர்.

அதை வைத்து விலையுயர்ந்த ஆடம்பர கார்கள், துபாய், மோனாகோ, நியூயார்க் போன்ற இடங்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி வார விடுமுறை நாட்களில் லண்டனில் இருக்கும் டாப் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கியுள்ளனர்.

அதன் பின் அழகு நிலையம், சொத்துக்கள் போன்றவைகள் வாங்கி அதில் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. லாட்டரியில் வென்ற பணம் எல்லாம் காலியான பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்