மேகன் மெர்க்கலைத் தேடி வந்த சகோதரி: இளவரசியை பார்க்க அனுமதிக்கப்பட்டாரா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியை திறமையில்லாதவர் என்றும் அவரது மனைவியான மேகனை போலியாக புன்னகைப்பவர் என்றும் விமர்சித்த மேகனின் சகோதரி அவரைக் காண்பதற்காக நேரடியாக மேகனின் வீட்டுக்கே சென்றார்.

மேகனின் சகோதரியான சமந்தாவும் அவர்களது தந்தையான தாமசும் ராஜ குடும்பத்தை பல முறை தங்கள் பேட்டிகளாலும் புகைப்படங்களாலும் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கினார்கள்.

இந்நிலையில் திடீரென சமந்தா நேரடியாக மேகனின் வீட்டுக்கே வந்து விட்டார். இதுவரை இருந்த பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசித் தீர்க்கும் நோக்கில் சமந்தா மெர்க்கல் மேகன் வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது.

ஆனால் மேகனின் வீட்டுக்கு செல்லும் சாலையின் முனையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

சமந்தாவால் பிரச்சினைகள் வரும் என்பதால் அவரை மேகன் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஏற்கனவே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் சமந்தா திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் சென்ற வாரம் அரண்மனைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் எப்படியாவது தன்னையும் தன் சகோதரியையும் சந்திக்க அனுமதிக்காவிட்டால் மோசமாக நடந்து கொள்வேன் என சமந்தா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers