தமிழ்ப்பட நடிகை திருமணத்தில் கலந்து கொள்வாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்? வெளியான தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில், கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் மேகன் மெர்க்கல் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவருக்கும் நிக் என்பவருக்கும் வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. பிரியங்கா சோப்ராவும், பிரித்தானிய இளவரசி மெர்க்கலும் தோழிகள் ஆவார்கள்.

2016-ல் ஒரு விருந்து நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

அதே போல் பிரியங்கா சோப்ரா திருமணத்தில் மெர்க்கல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திருமணத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் மெர்க்கல் தற்போது கர்ப்பமாக இருப்பது தான்.

பிரியங்கா சோப்ரா திருமணம் இந்தியாவில் நடக்கிறது. கர்ப்பமாக இருக்கும் இந்நேரத்தில் மெர்க்கல் வெகு தூர பயணம் செய்வது பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இதோடு மெர்க்கல் மற்றும் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்புக்கு பிரச்சனை இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers