பிரித்தானியாவில் பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி நடந்த கொள்ளை சம்பவம்! வெளியான சிசிடிவி காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீட்டில் இருக்கும் நபர்களை மிரட்டி கொள்ளையடித்த பின்பு, கொள்ளையன் ஒருவன் அந்த வீட்டின் முன்பே நடனம் ஆடிய சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் வெஸ்ட் யார்க்‌ஷர் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த 7-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 1.025 மணிக்கு புகுந்த கொள்ளையன்கள், அந்த வீட்டில் இருந்த நபர்களை பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் கொள்ளை சம்பவத்தின் போது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வெளியிட்டு இந்த நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொள்ளையன்கள் முகமுடி அணிந்து வந்துள்ளனர். அதிலும் ஒருவன் கொள்ளையடித்துவிட்டு, கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறான்.

மேலும் இந்த வீட்டில் இருந்த Lee என்ற பெண் கூறுகையில், அன்றைய தினம் முகமுடி அணிந்திருந்த சிலர் திடீரென்று வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

நான் அவரளை பல முறை வெளியில் துரத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை தொடர்ந்து அடித்தனர். அதன் பின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினர்.

என் மகள் வேறு நிறைமாத கார்ப்பிணியாக இருந்தால், கொதிக்கும் தண்ணீரை வாயில் ஊற்றிவிடுவேன் என்றும் மிரட்டினர். கையில் பயங்கர ஆயுதம் வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர்.

எங்கள் வீட்டில் German Shepherd நாய் வளர்கின்றோம். அதற்கும் அவர்கள் விஷம் வைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் நாயிக்கு மயக்க மருந்து கொடுத்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளன்ர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது நாய் நல்ல நிலையில் இருப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்