Brexit: ஜேர்மனியில் பிரித்தானிய பிரதமருக்கு சரியான வரவேற்பில்லை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வழக்கமாக ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அந்த நாட்டின் தலைவர் அவருக்கு முறைப்படி வரவேற்பளிப்பது வழக்கமாக உள்ள நிலையில், ஜேர்மனியில் பிரித்தானிய பிரதமருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படவில்லை.

பொதுவாக ஜேர்மனிக்கு வரும் தலைவர்களை வாசலுக்கு வந்து வரவேற்பது ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் வழக்கம்.

ஏற்கனவே பிரெக்சிட் குறித்த விடயங்கள் உலகத்தால் கவனித்துப் பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஜேர்மனி சென்ற பிரித்தானிய பிரதமர் தெரஸா மேயை ஏஞ்சலா மெர்க்கல் வெளியே வந்து வரவேற்கவில்லை.

யாரும், கூட இல்லாமல், அவமதிக்கப்பட்டதுபோல் தனியாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றார் தெரஸா மே.

பலர் வந்து தெரசாவை சந்தித்த பின்னரே போலியான ஒரு புன்னகையுடன் வந்து அவரை சந்தித்தார் ஏஞ்சலா.

அதன் பின்னரும் இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டதைக் காண முடிந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தெரஸா மே, பாரீஸ் சென்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

தெரஸா மேயும் ஏஞ்சலாவும் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers