பாத்டப்பில் குழந்தை பெற்றெடுக்க தயாராகும் இளவரசி மேகன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் தண்ணீரில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக யோகா மற்றும் தியானம் செய்து தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன்னுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி மேகனை அழைத்துக்கொண்டு கென்சிங்டன் அரண்மனையிலிருந்து சமீபத்தில் வெளியேறினார்.

இருவரும் தற்போது வின்ட்சர் பகுதியில் அமைந்துள்ள ஃபிரோமோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

இன்னும் சில வாரங்களில் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது. எந்த மருத்துவமனையில் மேகன் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து இன்று வரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேசமயம் இளவரசி வில்லியம், டயானா போன்று Lindo Wing பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையிலும் மேகன் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹோமியோபதியை அதிகம் விரும்பும் மேகன், தண்ணீரில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தினமும் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் பத்திரிக்கை தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்ய மேகன் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers