கொழும்புக்கு உடனடியாக பறந்து வரவேண்டும் என விரும்புகிறேன்: பிரித்தானிய இளம்பெண்ணின் நெகிழ்ச்சி பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கையில் வெடிகுண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்தம் கொடுக்க பலர் வரிசையில் நிற்பதை பார்க்கும் போது உடனடியாக விமானம் ஏறி கொழும்புக்கு வர விரும்புகிறேன் என பிரித்தானிய பெண் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

500-க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இரத்தம் அதிகளவில் தேவைப்படும் நிலையில் மக்கள் பலர் இரத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கைக்கு முன்னர் வந்துள்ள பிரித்தானிய பெண்ணான இங்கா கீச், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் சென்று வந்த நாடுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த நாடு இலங்கை தான்.

இந்த சூழலில் இலங்கையர்கள் வரிசைகளில் இரத்தம் கொடுக்க காத்திருக்கும் புகைப்படங்களை பார்த்தேன்.

அதை பார்க்கும் போது உடனடியாக விமானம் மூலம் கொழும்புக்கு வர வேண்டும் என விரும்புவதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...