துபாய் விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பிரித்தானிய விமானம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

துபாய் விமான நிலையம் அருகே பிரித்தானிய பதிவு கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 3 பிரித்தானியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகின் மிகவும் பிரபலமான துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தெற்கில் மூன்று மைல்கள் தொலைவில், டயமண்ட் DA62 என்கிற சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் பயணித்த மூன்று பிரித்தானியர்கள் உட்பட ஒரு தென் ஆப்பிரிக்கர் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய விமானம், Chessington-ல் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக துபாய் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும்.

விமான நிலையத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் சிறிது தாமதத்திற்கு பின் சீராக இயங்கிக்கொண்டே இருக்கின்றது. பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்