பிரிதானியாவில் மலைப்பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று தினசரி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
டெர்பிஷையர் என்ற இடத்தில் மலைப்பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் அந்த வழியாக தினமும் பயணம் செய்வதாக தெரிகிறது. இதில் பெற்றோருடன் ஒரு சிறுமி பயணிக்கும் காட்சியை காணலாம்.
300 அடி உயரம் கொண்ட பாறையில் ஒற்றையடிப் பாதையில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் இந்த காட்சிகள் நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
சிலர் சாகசங்களுக்காக இந்தப் பாதையைப் பயன்படுத்திய போதிலும் குறிப்பிட்ட குடும்பத்தினர் தினசரி திகில் பாதையைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதையை அவர்கள் பயன்படுத்தும் விதம் குறித்த ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.