இளவரசர் பதவிக்கு உலை வைத்த காதல்: காதலிக்கு பிறந்த குழந்தைக்கு தான்தான் தந்தை என ஒப்புக்கொண்டுள்ள இளவரசர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் தூரத்து உறவினரான ஒருவர் சிறிது காலம் ஒரு பெண்ணுடன் வைத்திருந்த உறவு, அவரது இளவரசர் பதவிக்கே உலை வைத்துள்ள நிலையில் அந்த பெண்ணின் குழந்தைக்கு தான்தான் தந்தை என அவர் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் Nicholas Medforth-Mills (34), ரோமேனியாவின் கடைசி மன்னரான Michaelஇன் பேரன் ஆவார்.

இவர் பிரித்தானிய மகாராணியாரின் தூரத்து உறவினர்.

Nicholasக்கும் Nicoleta Cirjan என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை தொடர்ந்து மறுத்து வந்தார் அவர்.

Nicholasஉடன் மூன்று மாதங்கள் தொடர்பிலிருந்ததாகவும் அதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் தெரிவித்திருந்த Cirjan, ராஜ குடும்ப வழக்கறிஞர்கள் தனது குழந்தையை கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக 2015ஆம் ஆண்டு ரோமேனிய ராஜ குடும்பம் Nicholasஇன் இளவரசர் பதவியை பறித்தது.

இந்நிலையில் Cirjanஇன் மூன்று வயது குழந்தையின் தந்தை யார் என்பதை அறிவதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தொடந்து வற்புறுத்தப்பட்டு வந்த நிலையில் Nicholas அதற்கு ஒப்புக்கொண்டார்.

நேற்று அந்த சோதனையின் முடிவுகள் வெளிவந்துள்ளதை அடுத்து, Nicholas தான்தான் அந்த மூன்று வயது குழந்தையின் தந்தை என ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் அந்த குழந்தை 18 வயதாகும் வரை அதை வளர்ப்பதற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டு, பொறுப்பற்று நடந்து கொண்ட Nicholasஇன் நடத்தை தன்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளதாக மன்னர் Michael தெரிவித்துள்ளதாக, Michaelஇன் தாயார் தெரிவித்துள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்