லொட்டரியில் நபருக்கு அடித்த பல கோடி அதிர்ஷ்டம்! அதன் பின்னர் மகிழ்ச்சிக்கு பதிலாக வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் பிரச்சனைகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பல கோடிகள் லொட்டரியில் பரிசாக விழுந்தும் பல்வேறு சூழ்நிலையால் பெரியளவில் பணத்தை இழந்த நபர், தான் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

ராய் ஜிப்னி (64) என்பவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு லொட்டரியில் £7.5 மில்லியன் என்ற அளவில் பெரிய பம்பர் பரிசு விழுந்தது.

பரிசு விழுந்த பின்னர் அரண்மனை போன்ற வீட்டை £1.1 மில்லியன் செலவில் அவர் கட்டினார்.

அந்த வீட்டின் நிச்சல்குளத்தின் அடியில் உள்ள தரையில் ராய் ஜிப்னியின் பெயரும் அவருக்கு லொட்டரியில் பரிசு விழுந்த திகதியான 8 ஜூலை 1998 என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அவரின் மகிழ்ச்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. ராய்க்கு அவர் மனைவி டேர்லின் உடன் சண்டை ஏற்பட்ட நிலையில் அவரை விவாகரத்து செய்தார்.

விவாகரத்தையடுத்து மனைவிக்கு £350,000 மதிப்பிலான வீடுகள், தனியாக கார் எல்லாம் ராய் கொடுத்தார்.

இதோடு அவரிடம் இருந்த பணத்தை சில தவறான வழிகள் மூலம் அவர் இழந்தார். இதை தொடர்ந்து தான் ஆசையாக கட்டிய வீட்டை கடந்தாண்டு ராய் விற்றார்.

ஆனாலும் தான் மகிழ்ச்சியாக தற்போது இருப்பதாக ராய் கூறுகிறார்.

அவர் கூறுகையில் லொட்டரியில் அவ்வளவு பெரிய பரிசு விழுந்தும் மகிழ்ச்சி ஏற்படவில்லை, தற்போது பல பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்துள்ளேன்.

என் மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறேன்.

இப்போதும் லொட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கத்தை நான் விடவில்லை. மீண்டும் எனக்கு லொட்டரியில் பரிசு விழும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers