அன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்குவதற்கு வீடே இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது அவர் சிறந்த தொழிலாளர் என்று விருது வாங்கும் அளவிற்கு பெரிய ஆளாக உயர்ந்து நிற்கிறார்.

கடந்து வந்த காலம் கூறித்து Samantha Hart என்ற 34 வயது பெண் கூறுகையில், நான் என்னுடைய இளம் வயதில், அதாவது 17 வயது இருக்கும், அப்போது ஒரு கெட்ட கும்பலிடம் சிக்கினேன். இதனால் கெட்ட பழக்கங்கள் நிறைய இருந்தன.

தங்குவதற்கு வீடில்லை, எங்கு போய் தங்குவது என்றே தெரியாது. குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம், பல நாட்கள் தெருவில் தங்கியதுண்டு.

இப்படி நான்கு ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டேன். அது போன்ற சூழ்நிலையில் தான் என்னுடைய சிறு வயது தோழியின் அம்மாவை பார்த்தேன், அவர் என்னை அழைத்துச் சென்று நல்ல விஷயங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

இப்படி 6 மாதங்கள் கடந்தன, ஒரு கஷ்டமாகவே இருந்தது தவிர, இந்த உலகில் அடுத்த நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற போது தான், Mike Hall என்பவரை திருமணம் செய்து ஜெர்மனிக்கு சென்றுவிட்டேன்.

எங்களுக்கு அழகிய முதல் குழந்தை, இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தை பிறந்த போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பிரிந்துவிட்டோம். அப்போது என் குழந்தைகளில் கைக் குழந்தை, ஒரு வயது மற்றும் ஆறு வயது குழந்தை இருந்தனர்.

இதனால் மீண்டும் பிரித்தானியாவின் Hull-க்கு திரும்பி வந்துவிட்டேன். குழந்தை மற்றும் குடும்பத்திற்காக உறுதியாக நிற்க வேண்டும் என்பதால், ஒரு நான்கு மாத பயிற்சி பள்ளிக்கு விரலின் நெகங்களை அழகாக்கும் படிப்பை படித்தேன், ஏனெனில் நான் இதற்கு முன்பு நெகங்களை அழகாக்கும் பயிற்சிக்கு சென்றிருக்கிறேன், அதில் அனுபவம் இருந்ததால் அதில் சேர்ந்தேன்.

அதன் பின் அழகு குறிப்புக்காக பல யூ டியூப் வீடியோக்கள் பார்த்தேன், பல போராட்டங்கள், கஷ்டங்களுக்கு பிறகு Holderness சலை பகுதியில் Ultimate Blu என்ற சலூன் கடையை திறந்தேன். மற்றவர்களை விட வித்தியாசமாக நம் சலூன் கடை இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

இப்போது நான் வைத்திருக்கும் கடையில் இரண்டு ஊழியர்கள் இருக்கின்றனர். இன்னும் நிறைய என்பதே ஆசை, அதற்கான முயற்சிகள் சென்று கொண்டிருக்கிறது என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் Samantha Hart-ன் செயலை பாராட்டி அவருக்கு பல விருதுகளும் கொடுக்கப்பட்டது. அடுத்த வேளை சாப்பிட்டுற்கு, தங்குவதற்கு வீடில்லாமல் தவித்து பெண் ஒருவர் இன்று ஊழியர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers