இடிந்து போன இளவரசர் ஹரி... தாயார் டயானா மரணத்திலிருந்து மீட்ட நெருங்கிய நண்பர் தற்கொலை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் தற்கொலை செய்துக்கொண்டதால் அவர் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் இளவரசர் ஹரிக்கு, தென் துருவ கடுமையான பனிமலையேற்றத்திற்காக பயிற்சி அளித்த ஜூல்ஸ் ராபர்ட்ஸ் 37 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவத்தில் காயமடைந்தவர்களுக்கு நீதி திரட்டவே ராபர்ட்ஸ் இப்பயிற்சியை வகுப்பை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜூல்ஸ் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார், பின்னர் பெற்றோரின் வீட்டிற்கு அருகிலுள்ள உள்ள பகுதியில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த ஜூல்ஸ் ராபர்ட்ஸ், மனைவி ஃபிரான்செஸ்காவையும் அவர்களது இரண்டு வயது மகளையும் அனாதையாக விட்டுச்சென்றுள்ளார்.

இளவரசர் ஹரி தனது மலையேற்ற நண்பரின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. ஜூல்ஸ் ராபர்ட்ஸின் இறுதிச் சடங்கிற்கு இளவரசர் பூக்களுடன் தனிப்பட்ட அஞ்சலி குறிப்பை அனுப்பியுள்ளார்.

ஹரி-ராபர்ட்ஸ் ஜோடி 2013 ஆம் ஆண்டு சந்தித்த நாள் முதல் நட்பாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதையை வளர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது

துருவ நிலைகளில் உறைபனியில் உயிர்வாழ்வது எப்படி என்று ஜூல்ஸ் ஹரிக்கு காற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும், தனது தாயார் டயானாவின் மரணத்துக்கு பின் 20 வயதிலிருந்து மிகுந்த குழப்பங்களால் போராடிக்கொண்டிருக்கும்போது, ஜூல்ஸ் எவ்வாறு ஆலோசனை கோரி தன்னை மீட்டார் என்பதை 2017 ஆம் ஆண்டில் ஹரி கூறினார்.

நேற்று வெம்ப்லியில் நடந்த ரக்பி லீக் சேலஞ்ச் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஹரி, மிகவும் வருத்தப்பட்டார் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்