பிரெக்சிட்டை நிறைவேற்றாததை எதிர்த்து தெருக்களில் திரண்ட பிரித்தானியர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்று (அக்டோபர் 31) பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டிய நிலையில் அதை நிறைவேற்றாததை எதிர்த்து, பிரித்தானியர்கள் தெருக்களில் திரண்டு எதிர்ப்பு பேரணிகள் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொடிகளையும் பதாகைகளையும் கைகளில் ஏந்திக்கொண்டு முதலில் நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்தும், பின்னர் நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கியும் மக்கள் பேரணியில் ஈடுபட்டதையடுத்து, வேறு வழியில்லாமல் Whitehallஐ மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.

எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும் என்பது போன்ற பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் பேரணியில் ஈடுபட்டிருப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காண முடிகிறது.

அதே நேரத்தில், #BritainHasExploded என்ற ஹாஷ்டேக்குடன் ட்விட்டரில் தங்கள் கோபத்தை கிண்டலும் கேலியுமாக வெளிப்படுத்தினார்கள் பலர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...