பிரெக்சிட்: டிசம்பர் தேர்தலுக்கு தயாராகும் பிரித்தானிய கட்சித் தலைவர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களில் பலர் பல்வேறு கட்சிகளின் பிரெக்சிட் தொடர்பான கொள்கைகள் குறித்து குழப்பமடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு 25 நாட்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆக டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுமானால், நவம்பர் 6ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு அப்போதுதான் பிரசாரத்தில் ஈடுபட போதுமான நேரம் கிடைக்கும்.

அதன்படி, நாளை மறுநாள் பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் பிரெக்சிட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்.

என்றாலும், வாக்காளர்களில் பலர் பல்வேறு கட்சிகளின் பிரெக்சிட் குறித்த கொள்கைகள் குறித்து குழப்பத்திலேயே உள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் முன்னணி வகிக்க, லேபர் கட்சியின் ஜெரமி கார்பினின் பிரெக்சிட் குறித்த பார்வை அவருக்கு எவ்விதத்திலும் உதவும் என்று தோன்றவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்