தாடி வைத்ததற்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியர்: நீதிமன்றம் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
222Shares

தாடி வைத்ததற்காக ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ஆதரவாக நீதிமன்றம் ஒன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சீக்கியரான ராமன் சேத்தி பிரித்தானியாவில் பயணிக்கும்போது, லண்டன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்தார்.

முதலில் அவருக்கு வேலை ஒன்று தயாரான நிலையில், பின்னர் அவருக்கு தாடி இருப்பதால் அவரை பணியில் வைத்துக்கொள்ள முடியாது என வேலை வாய்ப்பு அலுவலகம் கூறிவிட்டது.

தான் ஒரு சீக்கியர் என்பதால் தன்னால் தனது தாடியை எடுக்க முடியாது என்பதால், இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் ராமன்.

அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஒருவர், வேலை வாய்ப்பு அலுவலகம், அவருக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா என கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மதத்தின் அடிப்படையில் அவர் மீது பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, ராமனுக்கு 7,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

ராமன் சேத்தியோ, அந்த பணம் தனக்கு வேண்டாம் என்று கூறி, அதை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு கொடுக்கப்போவதாக கூறிவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்