பிரித்தானியா பொதுத்தேர்தல்: 650-ல் 350 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானது!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பொதுத்தேர்லில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பிரதான கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

நேற்று டிசம்பர் 12ம் திகதி பிரத்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 இடங்களில் வெற்றிப்பெற பெரும்பான்மையாக 326 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும், பிந்தைய கருத்து கணிப்பும் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வாக்கு எண்ணிக்கையில் 200 தொகுதிகளில் முடிவுகள் வெளியானது. அதில், கன்சர்வேடிவ் கட்சி 93 இடங்களில் வென்று முன்னிலைப் பெற்றது.

itv

அடுத்தபடியாக தொழிலாளர் கட்சி 81, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 16, தாராளவாத ஜனநாயகவாதிகள் 1, மற்றவை 9 இடங்களில் வெற்றிப்பெற்றன.

அடுத்தகட்டமாக, 350 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், கன்சர்வேடிவ் கட்சி 177 இடங்களில் வென்று தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளது.

அடுத்தபடியாக தொழிலாளர் கட்சி 127, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 24, தாராளவாத ஜனநாயகவாதிகள் 5, மற்ற கட்சிகள் 17 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளன.

itv

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்