தந்தை என நினைத்து பல வருடமாக ஒருவர் மீது பாசமாக இருந்த மகள்! DNA பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தந்தை என நினைத்து ஒருவருடன் பல வருடமாக மகள் வாழ்ந்து வந்த நிலையில் தனது உண்மையான தந்தை யார் என DNA பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டுள்ளார்.

Emma Cooper என்ற பெண்ணுக்கு தற்போது 38 வயதாகிறது.

இவர் தனது பெற்றோருடன் சிறுவயதில் இருந்து வசித்து வந்த நிலையில் ராய் என்பவர் தான் தனது தந்தை என நினைத்திருந்தார்.

ஆனால் தந்தையின் உருவத்தில் சிறிதளவு கூட தான் ஒத்து போகவில்லை என்ற சந்தேகம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.

அதே போல தன் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பெயரை எழுதும் இடத்தில் ராய் பெயர் இல்லாதது அவருக்கு பெரும் குழப்பதை ஏற்படுத்தியது. இது குறித்து தாயிடம் அவர் கேட்ட போதும் அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.

Triangle News

இந்த சூழலில் Emma Cooper-க்கு 16 வயது இருக்கும் போது ராய் கடந்த 1998ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

இதன் பின்னர் வருடங்கள் உருண்டோடின, Emmaவுக்கு திருமணமானது.

இந்நிலையில் கடந்தாண்டு திடீரென முன்னோர்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும் ancestry DNA பரிசோதனையை Emma மேற்கொண்டதில் அவருக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தது.

Triangle News

அதாவது Trevor Ranger என்பவர் தான் தனது உண்மையான தந்தை என்பதை Emma தெரிந்து கொண்டார்.

தனது தாய் Trevor உடன் டேட்டிங் சென்றதும் அதன்பின்னர் அவர் கருவுற்று தான் பிறந்ததும் Emmaவுக்கு தெரிந்தது.

இதையடுத்து தனது தந்தையை தேடி கண்டுபிடித்த Emma-வுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அதாவது தந்தையின் கண்கள் போலவே தனது கண்களும் நீல நிறமாகவும், இருவருக்கும் அதிகளவு ஒற்றுமை இருந்ததும் தெரிந்தது.

இது குறித்து Emma கூறுகையில், என் தந்தையை கண்டுபிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

என் தாய் இந்த விடயத்தை ஏன் மறைத்தார் எனவும் எனக்கு தெரியும், தனக்கு வேறு நபருடன் பழக்கம் இருந்தது வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதியதாலேயே அதை எல்லோரிடம் இருந்து மறைத்தார்.

திருமணத்தின் போது தந்தை இல்லையே என வருத்தப்பட்டேன், தற்போது தந்தை கிடைத்துவிட்டதால் மீண்டும் என் கணவரை அவர் முன்னிலையில் மணக்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Ian Scammell/Triangle News

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்