சிகிச்சைக்கு மறுத்த கொரோனா வைரஸ் தாக்கிய முதல் பிரித்தானியர்: எப்படி குணமானார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இரண்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட பிரித்தானியர் ஒருவர் சிகிச்சை பெற மறுத்ததோடு, கள் குடித்தே குணமானதாக தெரிவித்துள்ளார்.

வேல்ஸைச் சேர்ந்த Connor Reed (25) ஒரு ஆங்கில ஆசிரியர். கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவிலும், கடந்த ஆறு மாதங்களாக வுஹானிலும் வாழ்ந்து வருகிறார் அவர்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருக்கு மூச்சுத்திணறலும், கடுமையான இருமலும் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு ஆண்டிபயாட்டிக்குகளைக் கொடுக்க, மருந்து சாப்பிட விரும்பாத Reed, அவற்றை சாப்பிட மறுத்துள்ளார்.

தானே விஸ்கியையும் தேனையும் கலந்து கள் தயாரித்து குடித்ததாக தெரிவிக்கும் Reed, இன்ஹேலரை மட்டும் பயன்படுத்தி இருமலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம்.

பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அவர் வீடு திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான், அவருக்கு ஏற்பட்டிருந்தது கொரோனா வைரஸ் தொற்று என மருத்துவர்கள் அவருக்கு தெரிவித்துள்ளார்கள்.

அப்படிப் பார்த்தால், அவர்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய பிரித்தானியர் ஆகிறார்.

விஸ்கியையும் தேனையும் கலந்து கள் தயாரித்து மருந்தாக பயன்படுத்துவது பழங்கால சிகிச்சை முறை என்கிறார் Reed.

தற்போது வுஹான் நகரம் யாருமற்ற ஆவி நகரமாக காட்சியளிப்பதாகவும், பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்கள் காலி ஆகி வருவதோடு, மருந்துக்கடைகளில் மருந்துகளும் மாஸ்குகளும் காலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Reed.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்