27 ஆண்டுகளாக பல் மருத்துவரிடம் செல்வதை தவிர்த்த நபர்! பின்னர் x-rayவில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் 27 ஆண்டுகளாக பல் மருத்துவரிடம் பயத்தின் காரணமாக செல்லாமல் இருந்த நபரின் தாடை பகுதி அகற்றப்பட்டு பேசமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Darren Wilkinson (51) என்பவருக்கு anemoblastoma என்ற கட்டி வாய்க்குள் ஏற்பட்டுள்ளது x-ray மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது அவர் வாயின் இடையில் ஓட்டில் பெரிய நிழல் போன்ற விடயம் இருப்பதை கண்டுபிடித்து மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

இது குறித்து Darren மனைவி Mel கூறுகையில், நான் பல ஆண்டுகளாக அவரை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல முயன்றேன், ஆனால் பயத்தின் காரணமாக அவர் வரவில்லை.

இந்த நிலையில் தான் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மருத்துவரிடம் சென்ற போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவருக்கு anemoblastomaல் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது அவரின் 90 சதவீத கீழ் தாடை அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவரால் பேசவோ, சாப்பிடவோ முடியாத நிலை உள்ளது.

Darren முகத்தின் நடுவில் ஒரு கருந்துளை இருந்தது, இதற்கு முன்பு அப்படி எதையும் பார்த்ததில்லை என பல் மருத்துவர்கள் கூறினார்கள்.

என் கணவர் காலையில் படுக்கையில் இருந்து எழுந்த போது தொடர்ந்து அவர் வாயில் இருந்து இரத்தம் வந்தது.

அவர் சரியாக பல் துலக்காததால் இப்படி ஆவதாக நினைத்தேன், ஆனால் பின்னரே இதன் விபரீதம் புரிந்தது. அவருக்கு இதுவரை ஆறு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அவரின் கீழ் கால் எலும்புகளில் இருந்து சில பகுதிகளை எடுத்து அவரது தாடையை மீண்டும் உருவாக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்