லண்டனில் அதிகாலையில் பயங்கரம்... குத்தி கொல்லப்பட்ட தந்தை! முதல் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட இளம் தந்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hounslow-வில் Surrey-வுக்கு வடக்கே சில மைல் தொலைவில் Green Lane பகுதியில் உள்ள Clements Court-க்கு கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.47 மணிக்கு பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது சுமார் 30 வயதிற்குள் இருக்கும் கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் செய்தி வெளியானது.

(Image: Met Police)

இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

மேலும் அந்த நபரின் பெயர் Nathan Mitra எனவும் 22 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ தினத்தன்று கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில், சரியாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்கு சதி செய்ததாக கூறி, இந்த சம்பவம் தொடர்பாக 22 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். அன்றை தினம் பார்ட்டி நடந்துள்ளது. அப்போது தான் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருக்க முடியும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த Nathan Mitra இரண்டு குழந்தைகளின் தந்தை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

(Image: David Nathan)

இது குறித்து விசாரணை நடத்தி வரும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் ராப் பேக், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால், பொலிசாரிடம் தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

அதுமட்டுமின்றி, சம்பவ தினமான வியாழக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் இருந்த எவரும் அசாதாரணமான அல்லது சந்தேகங்களுக்கு கூரிய நபர்களை நீங்கள் பார்த்திருந்தால், எனது அணியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்