பெண் மீது ஏறி ருத்ரதாண்டவம் ஆடிய கொரில்லா: உணவளிக்க சென்றபோது நடந்த கொடூரம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
983Shares

ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை வளர்த்த பயிற்சியாளரையே கடித்துக் குதறிவிட்டது கொரில்லா ஒன்று.

Malabo என்ற கொரில்லாவை, அது பிறந்ததிலிருந்து 29 வயது வரை வளர்த்துவந்த பயிற்சியாளரான 46 வயது பெண் ஒருவர், வழக்கம்போல அதற்கு காலை உணவு கொடுப்பதற்காக சென்றிருக்கிறார்.

அப்போது மூன்று கதவுகளை உடைத்துக்கொண்டு வந்த அந்த கொரில்லா, அந்த பெண்ணை கடித்து துவம்சம் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 200 கிலோ எடையுள்ள அந்த கொரில்லாவிடம் சிக்கிய அந்த பெண்ணின் இரு கைகளும் உடைந்துள்ளதோடு, அவரது மார்பு மற்றும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தித்தான் அந்த கொரில்லாவை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.

பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்