பிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? தீவிரமாகும் 2-வது அலை? எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
1847Shares

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் அபராதம் அல்லது சிறை செல்ல நேரிடும்.

இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் கொரோனாவின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

thesun

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24, 701 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா வைரஸ் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 367 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 14-ஆம் திகதி புதன்கிழமை 137 பேர் உயிரிழந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் 174 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் இழந்தவர்கள் 33 முதல் 102 வயதுக்குட்பட்டவர்கள். 61 முதல் 87 வயதுக்குட்பட்ட நான்கு பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகள் தெரிந்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit: PA:Press Association

அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் வடமேற்கில் 50-ஆக பதிவாகியுள்ளன, 48 பேர் வடகிழக்கு மற்றும் யார்க்ஷயரில் உயிரிழந்துள்ளனர். 44 பேர் மிட்லாண்ட்ஸில் மற்றும் 11-பேர் தென்கிழக்கிலும், தென் மேற்கில் மூன்று பேரும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பத்து பேரும் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு பெருநகரத்திலும் இப்போது 100,000 பேர்களில், 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஸ்காட்லாந்தில், 1,202 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். வேல்ஸில், 1,414 பேர் புதிதாக வைரஸ் பாதிப்பால் கண்டறியப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேல்ஸில் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்று, 7 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போது அது 37-ஆக உயர்ந்துள்ளது.

Credit: Reuters

நாட்டின் ஆலோசகர் ஜெனரல் ஜெர்மி மைல்ஸ், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடத்திற்கும், மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கும், நாம் பார்த்த இறப்பு புள்ளிக்கும் இடையில் ஒரு பின்னடைவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நாடு முழுவதும் இறப்புக்கள் அதிகரித்து வருவதால், புதிய வழக்குகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து கொண்டிருக்கக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் 21-ஆம் திகதி பிரித்தானியா அதன் மிகப்பெரிய தொற்று உயர்வு 26,688-ஆக பதிவாகியுள்ளது.

அதை இன்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஏழு சதவீதம் குறைவாக உள்ளது.ஆனால் கொரோனா பரவல் பதிவு செய்யப்பட்டதில் இருந்து பார்த்தால், இது ஒரு உயர்ந்த எண்ணிக்கை தான்,

ஆனால் வரும் வாரங்களில் இறப்பு விகிதம் தொடர்ந்து உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் - வழக்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே போனாலும் கூட இறப்பு விகிதம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை சில காலம் தொடரக்கூடும் என்று பொது சுகாதார இங்கிலாந்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் யுவோன் டாய்ல் இன்று எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்