டோவர் துறைமுகத்தில் கடும் குழப்பம்... கோபத்தில் பொலிசாருடன் கைகலப்பில் இறங்கிய 10,000 லொறி சாரதிகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
581Shares

தங்களை நாடு திரும்ப அனுமதிக்காததால் கடுங்கோபம் அடைந்த லொறி சாரதிகள் பொலிசாருடன் கைகலப்பில் இறங்கியதால், டோவர் துறைமுகத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் எல்லைகள் மூடப்பட்டன.

பிரான்சும் பிரித்தானியாவிலிருந்து லொறிகள் தங்கள் நாட்டுக்குள் வர தடை விதித்தது.

இதனால் எல்லையின் இரு பக்கங்களிலும் லொறிகள் சாலைகளில் குவிந்தன. லொறிகளை இயக்கி வந்தவர்கள் இரண்டு நாட்களாக உணவும், கழிப்பறை வசதியும் இன்றி சாலைகளிலேயே தங்க நேரிட்டது.

பண்டிகைக் காலத்தில் வீடுகளுக்குச் செல்லமுடியாத ஆத்திரத்தில் டோவர் துறைமுகத்தில் நிற்கும் லொறி சாரதிகள் இன்று காலை பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியதால் அப்பகுதியில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

வீடுகளுக்கு திரும்ப முடியாத ஏமாற்றம் ஆத்திரமாக வெடிக்க, சாரதிகள் துறைமுகத்தை பாதுகாக்க நிறுத்தப்பட்டிருந்த பொலிசாரை தள்ளிக்கொண்டு போக முற்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாகனங்களை விட்டிறங்கி கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர். எல்லையை திற, நாங்கள் வீட்டுக்குப் போகவேண்டும் என்று குரல் எழுப்பிய அவர்கள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை மோசமான வார்த்தைகளால் திட்டினர்.

தற்போடு பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுளதைத் தொடர்ந்து லொறி சாரதிகள் எல்லை கடக்கலாம் என்றாலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால் மட்டுமே எல்லை கடக்க அனுமதிக்கப்படுவர் என்பதால் நிலைமை தணிந்ததுபோல் தெரியவில்லை.

யாருக்கு கொரோனா இல்லையோ, அவர்களுக்கு 20 நிமிடங்களுக்குள் அந்த செய்தி சென்று சேர்ந்துவிடும்.

ஆனால், யாருக்காவது கொரோனா இருப்பதாக உடனடி சோதனைகளில் தெரியவந்தால், அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அப்போதும் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஹொட்டல் ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்