பிரித்தானியாவில் அனைவருக்கும் வாரம் இரண்டு முறை இது வழங்கப்படும்! போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பூட்டுதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்திற்கு அரசு தயாராகி வருவதால், பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

அரசாங்கத்தின் சோதனைத் திட்டத்தின் விரிவாக்கத்தின் கீழ், பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்தில் இரண்டு விரைவான கொரோனா வைரஸ் சோதனைகளை அணுக வேண்டும்.

சுமார் 30 நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய lateral flow kits சோதனை தளங்கள், மருந்தகங்கள் மற்றும் தபால் மூலம் இலவசமாகக் கிடைக்கும்.

மக்கள் தங்களுக்கான சோதனையை தங்கள் பணியிடம் அல்லது பள்ளி சோதனைத் திட்டம் அல்லது உள்ளூர் சோதனை தளம் அல்லது தங்கள் வீட்டிலும் ஆர்டர் செய்து பரிசோதித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் புதிய தொற்றுகளை தடுக்க உதவும் என்றும், நோயின் புதிய வகைகளை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

"எங்கள் தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருவதோடு, எங்கள் திட்டத்தின்படி எச்சரிக்கையுடன் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், அந்த முயற்சிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு வழக்கமான விரைவான சோதனை இன்னும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

பிரித்தானியாவில் திட்டமிட்டபடி அடுத்தகட்டமாக ஏப்ரல் 12 முதல் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகள் உட்பட பல விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்