பிரித்தானிய மக்கள் கண்டிப்பாக இதை செய்யுங்கள்: கோரிக்கை வைத்த பிரதமர் போரிஸ் ஜோன்சன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியா மட்டுமின்றி, எஞ்சிய பல நாடுகளிலும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நீடித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ஜோன்சன்,

தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது தொடர்பில் அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பரவலாக அளிக்கப்பட்ட பின்னரும், கொரோனா பரவல் இருப்பது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட ஜோன்சன், அறிகுறி இல்லை என்ற போதும் கண்டிப்பாக இலவச பரிசோதனைகளுக்கு பொதுமக்கள் உட்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட மக்கள் கண்டிப்பாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை 80% அளவுக்கு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முதன்மை சுகாதார நிபுணர்,

அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 60% வரை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது அளிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியானது மிகவும் பலனளிக்கக்கூடியது என கூறிய அவர்,

ஆனால் முழுவதுமாக பலனளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிப்பது தொடர்பில் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அரசுக்கான முதன்மை ஆலோசகர் Sir Patrick Vallance தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொது ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய முடிவுகளை மிக விரைவில் எடுக்க இருப்பதாக போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்