கள்ளக்காதலியுடன் கூத்தடித்த கவர்னர்: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தேர்தல் செலவு கணக்கை முறையாக காட்டாத கவர்னர் ராபர்ட் பென்ட்லியை ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி தேர்தல் செலவுகளை முறையாக கணக்கு காட்டாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியான தொடர்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அவரை மாண்ட்கோமரி கவுண்டி ஜெயிலில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு வந்த பின்னர் ராபர்ட் பென்ட்லி தானாக பதவியை விட்டு விலகியுள்ளார்.

இவர் கவர்னர் பங்களாவில் கள்ளக் காதலியுடன் கூத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் இந்த காதல் விவகாரம் வெளியே வரவிடாமல் தடுப்பதற்காக, அரசு அதிகாரிகள் மூலம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

அவர், அரசுப் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், தான் சில வேலைகளில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை, தவறுகள் செய்துள்ளேன்.

எப்போதும் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்துள்ளேன். கவர்னர் பதவியை விட்டு இறங்குகிறேன். மற்ற முக்கியமான சேவைகள் செய்ய தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

74 வயதான பென்ட்லி, அமெரிக்கன் Air Force-ல் மெடிக்கல் அதிகாரியாக பதவி வகித்து கேப்டனாக ஒய்வு பெற்றவர்.

ஏழு வருடங்கள் கவர்னராக இருந்தாலும், சட்டத்திற்கு முன் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments