அமெரிக்காவில் பாட்டி- பேத்திக்கு நிகழ்ந்த கொடுமை: இந்தியருக்கு மரண தண்டனை

Report Print Santhan in அமெரிக்கா
510Shares
510Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பத்து மாத குழந்தை மற்றும் அவரது பாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (32). அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

அப்போது அதே குடியிருப்பில் உள்ள தெலுங்கு குடும்பத்தினருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தில் இருந்த வெங்கட வென்னாவும் அவரது மனைவியும் வேலை பார்த்ததால் அவர்களின் 10 மாத குழந்தையான சான்வியை அவரது பாட்டி சத்யாவதி (61) கவனித்து வந்தார்.

இதை தெரிந்து கொண்ட ரகு பணத்திற்காக 10 மாத குழந்தையை கடத்த முடிவு செய்தார். அதன் படி குழந்தையை கடத்த முயற்சித்த போது, பாட்டியான சத்யாவதி தடுத்ததால், அவரை கொலை செய்தார்.

குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்ததால், அழுவது யாருக்கும் கேட்காமல் இருக்க அதன் வாயில் துணியை திணித்து ஒரு பெட்டிக்குள் வைத்தார்.

வீட்டில் இருந்த நகைகளையும் அந்த பெட்டிக்குள் வைத்து எடுத்துச் சென்றார். பின்னர் குழந்தையை கொலை செய்த அவர் உடலை குடியிருப்பின் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்த லாக்கரில் போட்டுவிட்டார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரகு தான் இந்த செயலை செய்துள்ளான் என்பது தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை நடந்து வந்த வேளையில், 61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக ரகுவிற்கு கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு விதித்தது.

இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 23-ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்