வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

Report Print Athavan in அமெரிக்கா
93Shares
93Shares
lankasrimarket.com

வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர் தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் அதன்பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் வெள்ளை மாளிகை பொலிஸார் ஊடங்களிடம் கூறினர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் புளோரிடாவில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயரை வெளியிட பொலிசார் மறுத்து விட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இது குறித்து பொலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்