நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்: விசித்திரமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவிற்கு செல்லும் விமானம் ஒன்றில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பெல்டிமோர்-பொவுன்ட் என்ற ஜோடி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் Southwest Airlines விமானத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து அறிமுகமாகியுள்ளனர்.

நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் நாளைடைவில் காதலராக மாறியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தங்களுடைய திருமணத்தை தாம் முதலில் எந்த விமானத்தில் சந்தித்தோமோ அந்த விமானத்திலே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அதன் படி சமீபத்தில் அமெரிக்காவின் Baltimore பகுதிக்கு செல்லும் Southwest Airlines விமானத்தில் பயணித்த இவர்கள், விமானம் புறப்பட்ட 45-வது நிமிடத்தில் திருமண ஆடைகளை அணிந்துக்கொண்டு விமானத்தில் இருமுனைகளில் இருந்து மையத்தை நோக்கி வந்து தங்களது திருமணத்தை குறித்து அறிவித்தனர்.

இதைக் கண்ட சக பயணிகள் அவர்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers