8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரன்: 30 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் இண்டியானா மகாணத்தின் Fort Wayne நகரில் வசித்து வந்த April Tinsley(8) என்ற சிறுமி கடந்த 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு, அவர் வீட்டிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாக்கடையில் சடலமாக கிடந்தார்.

அதன் பின் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வு செய்த போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 90ல் கொட்டகை ஒன்றில் எழுத்தப்பட்டிருந்த வாசகமும், 2004-ல் பயன்படுத்தப்பட்ட 3 ஆணுறைகளுடன், பலாத்காரம் செய்ததாக இருந்த துண்டுச்சீட்டு மட்டுமே பொலிசாருக்கு தடயமாக கிடைத்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி தடயங்களை DNA ஆய்வுக்குட்படுத்திய பொலிசார், அதன் அடிப்படையில், 59 வயதான ஜான் மில்லர் என்பவனை கைது செய்துள்ளனர்.

அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers