ஒரு மர்மக் கடிதம் காட்டிக் கொடுத்த 11 குழந்தைகளின் பிணங்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மிச்சிகன் பொலிசாருக்கு வந்த மர்மக் கடிதம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் 11 குழந்தைகளின் உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து அந்த கட்டிடத்தை பொலிசார் சோதனையிட்டதில் அங்கு அழுகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

எழுதியவர் பெயர் குறிப்பிடாத அந்த கடிதத்தில் எங்கு பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன, அங்கு எப்படி செல்ல வேண்டும் என்பது போன்ற விவரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன.

கதவுக்கு மேலே உள்ள சீலிங் பகுதியில் ஒரு மறைவான இடம் இருப்பதாகவும், அதில்தான் குழந்தைகளின் உடல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்ட அந்த கடிதம் கண்டதும் பொலிசார் அந்த இடத்தை உடனடியாக சோதனையிட்டனர்.

அது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்பவர்களின் அலுவலகம்.

அந்த அலுவலகம் ஏற்கனவே உடல்களை முறையாக பதப்படுத்தி வைக்காததற்காகவும், இறப்பு சான்றிதழ்களிலும் ஆவணங்களிலும் முறைகேடு செய்ததற்காகவும் அரசாங்கத்தால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்குப்பின்னும் அங்கு உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவற்றில் 10 உடல்கள் அழுகிய நிலையில் அந்த மறைவிடத்திலும், ஒரு உடல் மட்டும் ஒரு சிறிய சவப்பெட்டிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்தன.

அந்த உடல்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers