காதலன் மீது ஏறி உட்கார்ந்து கொலை செய்த 300 பவுண்ட் எடையுள்ள பெண்: என்ன தண்டனை?

Report Print Raju Raju in அமெரிக்கா

காதலன் மீது ஏறி உட்கார்ந்து அவரை மூச்சடைக்க வைத்து கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தை சேர்ந்தவர் விண்டி தாமஸ் (44). இவர் தனது காதலன் கீனோ பட்லர் (44) உடன் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் மது அருந்தியுள்ளார்.

பின்னர் இருவருக்கும் சிறிய அளவிலான சண்டை ஏற்பட்ட நிலையில் கோபத்தில் பட்லரை அடித்து வயிற்றில் குத்தினார் விண்டி.

பின்னர் 300 பவுண்ட் எடையுள்ள விண்டி, பட்லர் மீது ஏறி அழுத்தி உட்கார்ந்தார். இதில் மூச்சு திணறி பட்லர் உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் விண்டியை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பட்லரை விண்டி வேண்டுமென்றே கொலை செய்யவில்லை எனவும், எதிர்பாராதவிதமாக இது நடந்து விட்டதாக விண்டியின் வழக்கறிஞர் வாதாடினார்.

ஆனால், பட்லரை அடித்து உதைத்த பின்னர் அவர் மீது ஏறி விண்டி உட்கார்ந்து கொலை செய்ததால் அவர் தரப்பு வாதத்தை ஏற்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

இதையடுத்து தீர்ப்பு விபரம் வரும் 21-ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

விண்டிக்கு 18-லிருந்து 36 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers