பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்.. 3 நாட்கள் உணவின்றி லிஃப்டில் சிக்கிய பெண் ஊழியர்! பின்னர் நடந்த சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் வீட்டு வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவர், தமது உரிமையாளர் சுற்றுலா சென்றதால் 3 நாட்கள் லிஃப்டில் சிக்கித் தவித்தார்.

நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வாரன் ஸ்டீபன்ஸ் என்பவருக்கு, மன்ஹாட்டன் பகுதியில் 5 அடுக்கு மாடி சொகுசு வீடு உள்ளது. இதில் மரைட்ஸ் ஃபோர்ட்டாலிஸா(53) எனும் பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வாரன் ஸ்டீபன்ஸ் தனது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ஃபோர்ட்டாலிஸா வீட்டு வேலையை முடித்துவிட்டு, 2வது மாடியில் இருந்து 3வது மாடிக்கு லிஃப்டில் வந்துகொண்டிருந்தபோது திடீரென லிஃப்ட் பாதியில் நின்றது.

இதனால் ஃபோர்ட்டாலிஸா அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், வீட்டு உரிமையாளர்கள் இல்லாததால் செய்வதறியாமல் தவித்த அவர், மூன்று நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி லிஃப்டிலேயே இருந்தார்.

இந்நிலையில், ஸ்டீபன்ஸ் தம்பதியினர் வீடு திரும்பினர். லிஃப்டில் ஃபோர்ட்டாலிஸா சிக்கித் தவித்தது அவர்களுக்கு தெரிந்த நிலையில், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஃபோர்ட்டாலிஸா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers