கணவனின் காதலியைக் காட்டிக் கொடுத்த கார் விபத்து! கண்ணீர் விடும் மனைவி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

இன்னும் சிறிது நேரத்தில் வீட்டில் இருப்பேன் கண்மணி,என குறுஞ்செய்தி அனுப்பிய கணவன் வாராததைக் கண்டு வருத்தத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு, தன் கணவன் விபத்தில் இறந்து போன செய்தி ஏற்படுத்திய துக்கம் ஒருபுறம் இருக்க, அவரைக் குறித்து வெளியான செய்தி மேலும் துக்கத்தை அதிகரித்தது.

புளோரிடாவைச் சேர்ந்த Arizbet Vazques Contreras (25), குடிபோதையில், சிக்னலில் நின்ற ஒரு மோட்டார் பைக் மீது தனது காரை மோதியதில் அந்த பைக்கில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

பொலிசார் வந்து காரை ஓட்டிய Contrerasஐ கைது செய்து விசாரித்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நபரைப் பார்த்த அவர், அது தனது காதலரான Jason Sasser (37) என்றும், தாங்கள் இருவரும் இப்போதுதான் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர்மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததும், உயிரிழந்த Jasonம் மது அருந்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில் Jason இறந்துபோன செய்தியை அவரது குடும்பத்துக்கு தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு பொலிசார் போன் செய்தபோது, போனை எடுத்து பேசியவர், தான் Jasonஇன் மனைவி என்று கூற, அப்போதுதான் பொலிசாருக்கு Jason மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் பழகி வந்த விடயம் புரிந்தது.

Jason விபத்தில் இறந்த செய்தி கேட்டு கதறியழுத அவரது மனைவி Kimberly Wattersக்கு மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை பொலிசாருக்கு! Kimberlyயிடம் நடந்ததை தெரிவிக்க, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சிறிது நேரத்திற்கு முன்தான், தனக்கு Jason சிறிது நேரத்தில் வீட்டுக்கு வருவதாக குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்த Kimberly, தன் கணவனுக்கு இப்படி ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருப்பது தனக்கு இதுவரை தெரியாது என்று தெரிவித்தார்.

இப்போது தன் கணவன் இறந்ததற்காக அழுவதா, அல்லது அவர் தனக்கு துரோகம் செய்வதற்கா என்றே புரியாமல் கண்ணீர் விடுகிறார் Kimberly.

இதற்கிடையில் Jason உயிரிழப்புக்கு காரணமாக இருந்த Contrerasஐ பொலிசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் Contrerasக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers