அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைகேடு.. டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை: பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஹிலாரி கிளிண்டன் வெற்று பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் டிரம்பின் வெற்றியில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றஞ்சாட்டது. மேலும் இது குறித்து ஜனாதிபதியின் சிறப்பு கவுன்சில் விசாரணை ராபர்ட் முல்லர் தலைமையில் நடைபெற்று வந்தது.

இதில் டிரம்பின் உதவியாளராக இருந்த பால்மனா போர்ட் என்பவர், உக்ரைன் அரசியல்வாதிகளிடம் இருந்து 55 மில்லியன் டொலர் பணத்தை பெற்று வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

Brendan SMIALOWSKI/AFP/GETTY IMAGES

இதனை பால்மனாபோர்ட் மறுத்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக உக்ரைன் அரசியல்வாதிகளுக்காக பணியாற்றியதாகவும், தனக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.

ஆனால், இந்த வழக்கில் பால்மனா போர்ட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, இவர் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக உள்ளது.

அத்துடன் பால்மனா போர்ட் வழக்கில் இவருடன் தேர்தல் பணியாற்றிய ரிக்கேட்ஸ் மற்றும் 4 உதவியாளர்களும் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்