ஐந்து வருடத்தில் மூன்று முறை லாட்டரியில் பெரிய தொகையை வென்ற தம்பதி... மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கணவருக்கு ஏற்கனவே இரு முறை லாட்டரியில் பெரிய தொகை பரிசாக விழுந்த நிலையில் தற்போது அவர் மனைவிக்கும் பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது.

Massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் கெவின். இவர் மனைவி ஜெனட்.

கெவினுக்கு கடந்த 2014-ல் லாட்டரில் $1 மில்லியன் பரிசு விழுந்தது. பின்னர் மீண்டும் 2016-ல் கெவின் லாட்டரியில் $1 மில்லியன் பரிசை அள்ளினார்.

இந்நிலையில் கெவின் மனைவி ஜெனட் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அவருக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இதையடுத்து இருவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பரிசாக விழுந்த பணத்தை வைத்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளதாக ஜெனட் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers