கணவரை கட்டி வைத்து ஆணுறுப்பை அறுத்தெறிந்த மனைவி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கணவரை கட்டி வைத்து மர்ம உறுப்பை அறுத்தெறிந்ததாக அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

வட கரோலினாவை சேர்ந்த விக்டோரியா தாமஸ் என்கிற 56 வயது பெண் நேற்றைய தினம் அதிகாலை 4 மணியளவில், தன்னுடைய கணவன் ஜேம்ஸ் பிரபட் (61)-ஐ கட்டி வைத்து அவருடைய ஆணுறுப்பை அறுத்தெறிந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜேம்ஸை மீட்டு கிரீன்வில்லில் உள்ள விதாந்த் மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்றனர்.

வெட்டி வீசப்பட்ட அவருடைய உறுப்பை கண்டறிந்து ஐஸ்பெட்டியில் வைத்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸின் நிலை குறித்து இதுவரை அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அவருடைய மனைவி விக்டோரியா 10.45 மணிக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...