கணவனை கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்த மனைவி: அடுத்து நடந்த எதிர்பாராத திருப்பம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த குத்துசண்டை பயிற்சியாளரான ரோமன் கடந்த 2007ம் ஆண்டு மரியா என்கிற இளம்பெண்ணை இரவு நேர கேளிக்கை விடுதியில் சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்துள்ளது.

பின்னர் இருவரும் சொந்தமாக ஒரு உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வந்தனர். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இதனால் மரியா தன்னுடைய கணவரிடம் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் பொருளாதார சூழ்நிலைகளால் இருவரும் ஒரே வீட்டில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

சில நாட்கள் கழித்து மரியா, ரோமனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கஸ்டாவொ என்கிற நபரை ஏற்பாடு செய்து அவருக்கு 1500பவுண்டுகள் பணம் கொடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட வேண்டிய நபரின் புகைப்படத்தை பார்த்து கஸ்டாவொ அதிர்ந்துபோயுள்ளார். ஏனெனில் அதில் இருந்த ரோமன், அவருடைய பழைய நண்பர். தனக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்தவர் மற்றும் கஷ்டப்படும் நேரங்களில் உதவியவர் என்பதால் உடனடியாக அவருக்கு போன் செய்து, உங்களை கொலை செய்ய மரியா பணம் கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இதனை கேட்டதும் சிரித்த ரோமன், மரியாவை பொலிஸிடம் பிடித்துக்கொடுப்பதற்காக, தான் கொலை செய்யப்படுவதை போல மிகப்பெரிய நாடகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கேற்றாற் போல ரோமன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக கஸ்டாவொ, மரியாவிற்கு போன் செய்து கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தினை ஒருவர் கொண்டு வருவார் என தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடைய திட்டப்படி ரோமன் கொலை செய்யப்பட்டதை போல ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டு, மாறுவேடத்தில் இருந்த பொலிஸாரிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.

அதனை வாங்கி பார்த்ததும் மரியா நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, ரோமன் உண்மையில் இறந்துவிட்டாரா? என மரியா கேள்வி எழுப்பியுள்ளார். உடனே அந்த பொலிஸார் மரியாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மரியா தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்