நடிகர் மீது இருந்த அதீத ஈர்ப்பு... வெளிநாட்டில் புதுமணத்தம்பதியினருக்கு நடந்த சோகம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா
526Shares

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது அதீத ஈர்ப்புடன் மனைவி இருந்ததால் அவரை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட தினேஸ்வர் பட்­ஹிதத் (33) என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் டோன்னி டொஜோய் (27) என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி தினேஷ்வர் தன்னுடைய மனைவியை தாக்கி வந்துள்ளார்.

ஆகஸ்டு 21ம் திகதியன்று கணவன்-மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை கடுமையாக தாக்கிய தினேஷ்வர் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளித்த டோன்னி, கணவரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

புதன்கிழமையன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனைவியை காயப்படுத்தியதை தினேஸ்வர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தண்டனை விவரம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என கூறிய நீதிபதி, டோன்னிக்கு தேவையான பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கணவருக்கு இன்னும் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம் எனக்கருதிய டோன்னி, வெள்ளிக்கிழமையன்று தினேஸ்வர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து தினேஸ்வர் தன்னுடைய உறவினருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், டோன்னியை வீட்டில் வைத்து கொன்றுவிட்டதோடு தானும் தற்கொலை செய்துள்ளபோவதாக கூறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் அறிந்து பொலிஸார் செல்வதற்குள், கடற்கரையில் இருந்த மரத்தில் தினேஸ்வர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுபுறம் கத்திக்குத்து காயங்களுடன் டோன்னி வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில் இறுதிச்சடங்கிற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள டோன்னியின் சகோதரி ஃபன்னிதா பரகாட், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது டோன்னிக்கு அதிக ஈர்ப்பு இருந்ததால் தினேஸ்வர் பொறாமை கொண்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்